சுஜித் பெற்றோரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியது அதிமுக

Nov 09, 2019 08:49 PM 93

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சனின் பெற்றோரிடம் அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி சிறுவன் சுஜித் உயிரிழந்தான். அவனது குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாயும், அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி முதலமைச்சர் நிவாரன நிதியை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பெற்றோரிடம் ஏற்கனவே வழங்கினார்.

இந்தநிலையில், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் நிதியுவிக்கான காசோலையை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் சிறுவனின் பெற்றோரிடம் நேரில் வழங்கி ஆறுதல் கூறினர்.

Comment

Successfully posted