அஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் - கே.பி.முனுசாமி

Aug 13, 2020 04:51 PM 1612

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என, அஇஅதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் செய்தியளார்களை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்ததாக கூறினார். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அஇஅதிமுக தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Comment

Successfully posted