அதிமுகஅரசின் நலத்திட்டங்களை எண்ணி பார்த்து வாக்களிக்க வேண்டும்: துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்

Apr 04, 2021 03:20 PM 873

வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ற வகையில் அதிமுக அரசு செயல்படுத்தியுள்ள நலத்திட்டங்களை சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக வழங்கிய நலத்திட்டங்களால் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பலன் அடைந்ததாக தெரிவித்தார். அதிமுக அரசு வழங்கிய நலத்திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்றதை சுட்டிக்காட்டினார். திமுக தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு என்றும், செல்லும்படியான நல்ல நோட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்று அவர் தெரிவித்தார். அதிமுக அரசின் நலத்திட்டங்களை சிந்தித்து பார்த்து வாக்களிக்குமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

(( பெரியகுளம், தேனி

ஓ.பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

பெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

பெரியகுளம் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்

"திமுகவின் திட்டங்களால் பலன் பெற்றது ஸ்டாலின் குடும்பம் மட்டும்தான்"

"அதிமுகவின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்றுள்ளனர்"

"அதிமுகஅரசின் நலத்திட்டங்களை எண்ணி பார்த்து வாக்களிக்க வேண்டும்"))

Comment

Successfully posted