அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம்

Oct 06, 2019 12:37 PM 185

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அன்னியூரில் ஆயிரக்கணக்கான பெண்களுடன் வீதி வீதியாக சென்று அமைச்சர் செங்கோட்டையன் தீவிர வாக்கு சேகரித்தார்.
அதனை தொடர்ந்து அனந்தபுரம், சங்கீதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விக்கிரவாண்டியில் அதிமுகவின் வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்றும், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்பதை மக்கள் தீர்மானிக்க இருப்பதாகவும் கூறினார். இடைத்தேர்தல் முடிவுகள் வரலாறு படைக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

Comment

Successfully posted