அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து துணை முதல்வர் பிரசாரம்

Oct 15, 2019 09:55 PM 130

காவிரி, மேகேதாட்டு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி நாடகமாடுவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து மூன்றடைப்பு பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தமிழகத்தில் நல்லாட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். காவிரி, மேகேதாட்டு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி நாடகமாடுவதாக குற்றம்சாட்டிய துணை முதலமைச்சர், இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்தார். மின்சார தட்டுப்பாட்டை தீர்க்க முடியாத ஆட்சி, திமுக ஆட்சி என துணை முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted