அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

Oct 08, 2019 03:40 PM 165

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தளவாய்புரத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிமராமத்து பணி மூலம் நீர் மேலாண்மையில் முதலமைச்சர் புரட்சி செய்து வருவதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted