அதிமுக ஒருங்கிணைப்பாளரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

May 10, 2021 09:55 PM 832

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

அப்போது கழக ஒருங்கிணைப்பாளரான பன்னீர் செல்வமும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது தலைமை கழக நிர்வாகிகளும். சட்ட மன்ற உறுப்பினர்களும் உடன் இருந்தனர்

Comment

Successfully posted