அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை

Sep 15, 2021 05:56 PM 1311

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளையொட்டி, தேனி மாவட்டத்தில் அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி, பெரியகுளத்தில் உள்ள தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் அலுவலகத்தில், பேரறிஞர் அண்ணா திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  அண்ணா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத், தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், பெரியகுளம் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜக்கையன், கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பேரறிஞர் அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதைதொடர்ந்து, பெரியகுளம் காவல் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

 

Comment

Successfully posted