"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்" - அதிமுக துணை கொறடா ரவி

Jul 24, 2021 08:24 PM 2440

ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து இளைஞர்களையும், மாணவர்களையும், திமுகவினர் ஏமாற்றிவிட்டதாக அதிமுக துணை கொறடா ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தணிகை போளூர் பகுதியில் அதிமுக உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், ராணிப்பேட்டை மாவட்டக்கழக செயலாளரும், அதிமுக துணை கொறடாவுமான ரவி கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம் என்றும், கடைசி தமிழன் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக, ஆட்சிக்குக்கு வந்தபின்னர் இரட்டை வேடம் போடுவதாக, அதிமுக துணை கொறடா ரவி குற்றம்சாட்டினார்.

தேர்தலின்போதும் அளித்த வாக்குறுதிகளை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Comment

Successfully posted