5 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக அரசு!!!

May 23, 2020 07:33 AM 880

 

4 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 5 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஇஅதிமுக அரசு தமிழகத்தின் உரிமைகளை காக்க தொடர்ந்து செயலாற்றும் என தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அஇஅதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்ட அஇஅதிமுக தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்றதாக தெரிவிக்கபட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் மற்றும் தாய்மார்களின் நலன்களை காக்கும் எண்ணற்ற திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார் என்றும், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகும், பொதுமக்களின் பாதுகாவலனாகவும் உண்மை ஊழியனாகவும் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விளைவாக தமிழகத்தில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், சிறந்த ஆட்சியின் காரணமாக மத்திய அரசின் நல் ஆளுமைத் திறனுக்கான தரவரிசையில் தமிழகம் முதலிடம் பெற்றதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஇதிமுக அரசு தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் திறம்பட செயலாற்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் தொடர் வெற்றி பெற, கழக உடன்பிறப்புகள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted