அதிமுக சுயசார்புள்ள கட்சி-துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

Feb 11, 2019 03:07 PM 125

அதிமுக சுயசார்புள்ள கட்சி என்றும் அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி சேரும் என்பது குறித்து மூத்த நிர்வாகிகள் பேசி வருவதாக துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக எப்போதும் ஒரு சுயசார்புள்ள கட்சி என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த பின்னர் அவர் குறித்து பேசுவதாக தெரிவித்தார். கமல் தனியாக தேர்தலில் போட்டியிட நினைப்பது நல்லது என்றும், அப்போது தான் அவர் பலத்தை தெரிந்து கொள்ள முடியும் எனவும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

Comment

Successfully posted