மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட குரல் கொடுத்த அதிமுக எம்.பிக்கள் சஸ்பெண்ட்

Jan 02, 2019 06:10 PM 516

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த அதிமுக எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேகேதாட்டு அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேகேதாட்டு விவகாரத்தை, தினமும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக எம்.பிக்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், மேகேதாட்டுவில் அணை கட்ட வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என அதிமுக எம்.பிக்கள் குரல் கொடுத்தனர்.

இதனைதொடர்ந்து, அதிமுக எம்.பிக்கள் 26 பேரை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். இதே போன்று, மாநிலங்களவையில் இருந்து அதிமுக, திமுக எம்.பிக்கள் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Comment

Successfully posted