அதிமுக கூட்டணி உழைப்பாளர்களைக் கொண்ட கூட்டணி

Apr 01, 2019 06:50 AM 189

அதிமுக கூட்டணி உழைப்பாளர்களைக் கொண்ட கூட்டணி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணி வேட்பாளரை வெற்றிபெற செய்தால், தமிழ்நாட்டின் தேவைகளை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

அதிமுக கூட்டணி சேரக் கூடாது என்ற எண்ணத்தில் எத்தனையோ சூழ்ச்சிகளை திமுகவினர் செய்தனர் என்றும் ஆனாலும், சூழ்ச்சிகளை வென்று தற்போது வெற்றி கூட்டணியாக இணைந்துள்ளதாக அவர் கூறினார்.

Comment

Successfully posted