அதிமுக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

Apr 15, 2019 05:43 PM 63

சிறுபான்மை மக்களுக்கு அரணாக திகழ்ந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றும், சிறுபான்மை மக்களின் குடும்பத்தில் ஒருவராக பழகுபவர் துணை முதலமைச்சர் என்றும் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்.

ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் லோகிராஜனும், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தாய்மார்கள் ஆரத்தி எடுத்தும், குலவையிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய வேட்பாளர் ரவிந்திரநாத் குமார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சிறுபான்மை மக்களுக்கு எப்பொழுதும் பாதுகாப்பு அரணாக இருந்தவர் என்றும், துணை முதலமைச்சர், சிறுபான்மை மக்களின் குடும்பத்தில் ஒருவராக பழுகுபவர் என்றும் தெரிவித்தார். போடி - மதுரை ரயில் சேவை விரைவில் கொண்டு வரப்படும் என்றும் ரவிந்திரநாத் குமார் வாக்குறுதி அளித்தார்.

Comment

Successfully posted