விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Sep 25, 2019 11:19 AM 955

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதில் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராகக் காணை ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதி வேட்பாளராகத் திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Comment

Successfully posted