பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை

Oct 17, 2021 04:53 PM 2078

அண்ணா திமுக பொன்விழா ஆண்டையொட்டி, பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா திமுக தலைமை அலுவலகத்தில் பொன்விழா நிகழ்ச்சியை தொடர்ந்து, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்ற ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

image

 

இதனைத் தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திலும், புரட்சித் தலைவி ஜெயலலிதா நினைவிடத்திலும், மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comment

Successfully posted