அதிமுக 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்...

Oct 11, 2021 03:38 PM 1389

அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தொடங்கப்பட்டு 50ஆம் ஆண்டு பொன்விழா, வருகிற 17ம் தேதி கொண்டாட்டப்படும் நிலையில், அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,

துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் மற்றும் அதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், அதிமுக பொன்விழா ஆண்டை கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொன்விழா மாநாடு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.

Comment

Successfully posted