"திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் கடும் கண்டனம்"

Jan 19, 2022 02:58 PM 2085

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட திமுக அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயரை அதிமுக ஆட்சிக் காலத்திலேயே சூட்டப்பட்டு, சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டதாகவும்,

இதிலிருந்து கருணாநிதி பெயர் சூட்டினார் என்ற வாதம் வடிக்கட்டின பொய், அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தேவையில்லாதவற்றை அரசு செய்தி வெளியீட்டில் சேர்த்து தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தலைவரை, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள தலைவரை சிறுமைப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted