அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் - ”கிறிஸ்துமஸ் தின வாழ்த்து”

Dec 24, 2021 03:57 PM 3580

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்தவர்கள் அனைவருக்கும், அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பின் திருவுருவாம், கருணையின் வடிவமாம் இயேசுபிரான் அவதரித்த திருநாளை கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர்கள்.

ஆண்டவனின் பிள்ளைகளாகிய நாம் அன்புடனும், சகோதரத்துவ உணர்வுடனும் இயேசுபிரானின் உயரிய நெறியைப் பின்பற்றுவோம் என தெரிவித்துள்ளனர். மேலும், பகைவர்களிடத்திலும் அன்பு காட்டி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ கிறிஸ்துமஸ் நாளில் உறுதியேற்போம் என கூறியுள்ளனர்.

மலர இருக்கும் 2022 புத்தாண்டில், அனைவருக்கும் நல்லனவெல்லாம் நடைபெற்றிட வேண்டும் எனவும், அறிக்கையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 

Comment

Successfully posted