"அண்ணா திமுக கொடி எரிப்பால் பரபரப்பு"

Jan 21, 2022 04:51 PM 4298

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அதிமுக கொடியை மர்மநபர்கள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பரவாய் கிராமத்தில் அமைந்துள்ள அண்ணா திமுக கொடி மேடையை சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இது குறித்து புகார் அளித்தும் யாரும் கைது செய்யப்படாத நிலையில், அங்கிருந்த கொடிக்கம்பத்தில் இருந்த அதிமுக கொடியை மர்மநபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

இதுகுறித்து குன்னம் காவல்நிலையத்தில் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். கொடி மேடையை சேதப்படுத்திய மர்மநபர்களை கைது செய்ய காவல்துறையினர் அலட்சியம் காட்டியதால்,

தற்போது அதிமுக கொடி எரிக்கப்பட்டுள்ளதாக ஆவேசம் தெரிவித்துள்ள அவர்கள், மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர்.Comment

Successfully posted