அதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் செல்லூர் ராஜூ

Dec 13, 2019 05:56 PM 677

அதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

வைகை ஆற்றில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு பனையூர் கால்வாய் வழியாக மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணியைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். தமிழக அரசின் சாதனைகளை மக்கள் பாராட்டி வருவதைக் குறிப்பிட்ட அவர், எடப்பாடி பழனிசாமி ராசியான முதலமைச்சர் என்றும், அதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருவதாகவும் கூறினார்.

Comment

Successfully posted