கோவையில் 50 ஆண்டுகால வளர்ச்சியை அதிமுக கொடுத்துள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Jan 12, 2020 06:58 AM 350

கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 50 ஆண்டு கால வளர்ச்சியை அதிமுக கொடுத்துள்ளதாகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் பள்ளியில், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியதை கொண்டாடும் வகையில் இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ. பி.வேலுமணி கலந்து கொண்டு சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவம் செய்தார். இந்த நிகழ்ச்சியில், மழை நீரின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் பேசும் காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர், குடிமராமத்து பணிகளை செய்து முடித்ததும் நீர்நிலைகள் நிரம்பி உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், நொய்யலாற்றை தூர்வார 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அனைத்து குளங்களுக்கும் கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கான திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும் கோவை மாவட்டத்தில்,50 ஆண்டு கால வளர்ச்சியை அதிமுக கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மறைமுகத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted