10-ம் தேதி மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

May 08, 2021 09:51 AM 1267

 

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு, வரும் 10 ம் தேதி காலை மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted