அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு

May 09, 2021 08:28 PM 878

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி, அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா, சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும், அதிமுக மட்டும் 66 இடங்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து, வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தினர்.

அதில் முடிவு எட்டப்படாததால், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், திங்கள்கிழமை மீண்டும் கூடி முடிவெடுக்க தீர்மானித்தனர்.

இந்நிலையில், திங்கள் முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலாவதால், ஏற்கனவே திட்டமிட்டபடி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி, அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலகங்கா, காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Comment

Successfully posted