சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட நாளை வரை மட்டுமே விண்ணப்ப படிவம் வழங்கப்படும்! - அதிமுக தலைமைக் கழகம்.

Mar 02, 2021 08:06 AM 1329

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட நாளை வரை மட்டுமே விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதிமுதல் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை வரை மட்டுமே விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நாளை மாலை 5 மணிக்குள் படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப அளிக்க வேண்டுமெனவும் அதிமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

எக்காரணம் கொண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும் அதிமுக தலைமைக்கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

Comment

Successfully posted