இடைத்தேர்தலில் முன்னிலை: அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Oct 24, 2019 12:01 PM 147

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து, அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் வெடிகள் கொளுத்தியும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் திமுக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் காங்கிரஸ் வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார். இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளதால் கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comment

Successfully posted

Super User

சூப்பர் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது ops eps க்கு வாழ்த்துக்கள்


Super User

Annan Narayan avarkaluku valthukal