மக்களை பாதிக்கும் அரசின் செயல்களை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கும்

May 18, 2021 06:19 PM 1334

தலைமை செயலாளரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இக்கட்டான சூழ்நிலையில் அரசை குறை சொல்லும் எண்ணம் அதிமுகவிற்கு கிடையாது என்று கூறினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க திமுக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். அதிமுக அரசாங்கத்தில் அமைச்சர்கள் குழு, மருத்துவர் குழு என அனைத்து தரப்பு ஆலோசனைகளையும் கேட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயலாற்றியதை போல், தற்போதைய அரசும் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்பதே அதிமுகவின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், அனைத்து விதமான உள்கட்டமைப்பு வசதிகளையும் அதிமுக அரசு மேம்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டி, அரசு முழு வீச்சில் கண்காணிப்போடு செயல்பட்டால் கொரோனா அச்சத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

Comment

Successfully posted