அமமுக முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்

Jul 20, 2019 05:20 PM 135

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகி மலையாளம் அதிமுகவில் இணைந்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு, அமமுகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகளும், தொண்டர்களும் விலகி, அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்தநிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் மலையாளம், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comment

Successfully posted