அமமுக-விற்கு குக்கர் சின்னம் அளிக்கப்படாது : தேர்தல் ஆணையம்

Mar 25, 2019 12:50 PM 198

அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டிடிவி தினகரனுக்கு தேர்தலில் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அமமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று பரிசீலனை நடைபெற்ற நிலையில், டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் இன்று திட்டவட்டமாக தெரிவித்தது.

குக்கர் சின்னத்துக்கு பதிலாக வேறு ஏதாவது ஒரு சின்னம் அளிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted