நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு

Sep 11, 2021 10:30 AM 2460

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் 238 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகின்றன.

கொரோனா தொற்றுக்கு மத்தியில், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. தமிழ்நாட்எடில் நீட் தேர்வுக்கு  71 ஆயிரத்து 745 பெண்கள் உட்பட சுமார் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கடந்த 7ம் தேதி வெளியானது. நாடு முழுவதும் 200 நகரங்களில் நீட் தேர்வு நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 3 ஆயிரத்து 842 மையங்களில் நீட் தேர்வுகள் நடைபெறுகின்றன. நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், மதுரை, சேலம், திருச்சி, தஞ்சை, விருதுநகர், திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட 18 நகரங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டில் 238 மையங்களில் நடைபெறும் தேர்வில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நீட் தேர்வுகள் நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted