அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை -அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

Nov 04, 2018 07:18 AM 271

அதிக கட்டணம் வசூலித்த 10-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கோயம்பேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கூடுதல் கட்டணங்களை திரும்பப் பெற்று, பயணிகளிடமே வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

 

Comment

Successfully posted