வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

Apr 07, 2021 12:32 PM 562

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 59 புள்ளி 06 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக ஆர்.கே நகர் தொகுதியில் 66 புள்ளி 57 சதவீத வாக்குகளும், அதற்கு அடுத்தபடியாக பெரம்பூர் தொகுதியில் 62 புள்ளி 63 சதவீத வாக்குகளும் பதிவாகின. வேளச்சேரி தொகுதியில் குறைந்தபட்சமாக 55 புள்ளி 95 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் அனைத்து இயந்திரங்களும் மூடி சீல் வைக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted