நடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Jun 23, 2019 04:44 PM 132

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாண்டவர் அணியை எதிர்த்துபோட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்கியராஜ் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த், துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். பிற்பகல் ஒன்றரை மணி நேர நிலவரப்படி ஆயிரத்து 305 வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாக்குகளை எண்ணவோ முடிவுகளை வெளியிடவோ கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால், மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் வாக்குப் பதிவு மட்டுமே நடைபெறுகிறது. மூவாயிரத்து 171 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். தேர்தலையொட்டி சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Comment

Successfully posted