நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

Jan 24, 2020 03:42 PM 313

கடந்த ஜுன் மாதம் நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில், நாசர் தலைமையிலான அணியும், பாக்கியராஜ் தலைமையிலான அணியும் தேர்தலை சந்தித்தன. பின்னர் பல்வேறு சர்ச்சைகளின் காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து நடிகர்கள் விஷால், நாசர், மற்றும் கார்த்தி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். மேலும், நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என சங்க உறுப்பினர்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், கடந்த ஜூன் மாதம் நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. மேலும், அடுத்த 3 மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும், அதுவரை சங்கத்தை சிறப்பு அதிகாரி கீதா நிர்வகிப்பார் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Comment

Successfully posted