அஜித்திற்கு போட்டியாக நடிகர் கார்த்தி

Dec 15, 2019 05:47 PM 1503

அஜித்தின் நேர்கொண்டபார்வை படத்தின் வசூலை நடிகர் கார்த்தியின் கைதி படம் முறியடித்துள்ளது.

இந்தாண்டு தீபாவளிக்கு பிகில் படத்துடன் கார்த்தி நடிப்பில் உருவான கைதி படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பாடல்களே இல்லாமல் நேர்த்தியான கதை, மற்றும் திரைக்கதையினால் ரசிகர்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெரிதும் கவர்ந்தார் . சமீபத்தில் 50 நாட்களை கடந்த கைதி திரைப்படம் நடிகர் கார்த்தியின் சினிமா கேரியரில் 100 கோடி வசூலை பெற்ற முதல் படம் என்ற பெருமையை பெற்றது.தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யின் 64வது படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் கைதி திரைப்படம் வசூலில் மேலும் புதிய சாதனையை படைத்துள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நேர்கொண்டபார்வை படத்தின் வசூலான ரூபாய் 105 கோடி கைதி முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். அடுத்ததாக கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவான தம்பி திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

Comment

Successfully posted