திமுகவில் தான் இரட்டைத் தலைமை உள்ளது: நடிகர் ராதாரவி

Jun 12, 2019 07:34 PM 103

திமுக பேச்சாளரும் நடிகருமான ராதாரவி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்ற திமுக பேச்சாளரும் நடிகருமான ராதாரவி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

பின்னர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு உள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், திமுகவில் தான் இரட்டைத் தலைமை இருக்கிறது என விமர்சித்தார்.

Comment

Successfully posted