நடிகர் ரஜினிகாந்தின் டுவிட்டர் பதிவு நீக்கம்!

Mar 22, 2020 01:18 PM 1697

இன்று நடைபெறும் மக்கள் சுய ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். கொரோனா பாதிப்பின் 3ம் கட்ட நிலையை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது என்றும், இத்தாலியில் இது போன்ற 3ம் கட்ட நிலைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்கு மக்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் அங்கு பெரும் அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது என்றும், ஆனால் நாம் அனைவரும் இன்று நடைபெறும் மக்கள் சுய ஊரடங்கிற்கு ஒத்துழைக்கும் விதமாக, வீட்டிலேயே இருப்போம் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், விதிமுறைகளுக்கு எதிரான பதிவுகள் இருந்ததாக, அந்த வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.

Comment

Successfully posted