நடிகர் ரஜினிகாந்த் இன்று மீண்டும் ஆலோசனை!

Mar 12, 2020 10:00 AM 585

மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் ஆலோசனைக்கு பிறகு கட்சி பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 5 ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் மிஞ்சியது என கூறினார்.

இந்நிலையில், மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் கட்சி அறிவிப்பு பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கூட்டத்திற்கு பிறகு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பில், கட்சி அறிவிப்பு, கட்சி மாநாட்டுக்கான இடம், தேதி உள்ளிட்டவை குறித்து ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted