அரசியலில் களமிறங்குவது சந்தேகம்? ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

Oct 19, 2018 05:07 PM 741

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்றாலே, எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும், பிரம்மாண்ட இயக்குனர் ஒருவர், அவருடன் இணைவதாக தகவல் வெளியானால், பரபரப்பிற்கு பஞ்சமே இருக்காது.

தற்போது, பிரம்மாண்ட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ரஜினிகாந்திடம் கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல்தான், சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ரஜினிகாந்த்துடன் கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ள பேட்ட திரைப்படத்தின் சூட்டிங்கில் ரஜினி பிஸியாக இருந்து வருவதால், கட்சி தொடங்குவதற்கான பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது புதிய படத்தில் நடிக்க ரஜினி ஒப்பந்தமானால், கட்சி தொடங்குவதற்கான பணிகள் மேலும் தாமதமாகும் என அவரது ரசிகர்கள் வருத்தப்படுகின்றனராம். 

கட்சி தொடங்குவதில் ரஜினிக்கு ஆர்வம் இல்லை என சமூக வலைதளங்களில் பலரும் வெளிப்படையாக கூறி வருகின்றனர். 

 

Comment

Successfully posted