நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குசாவடியில் மறுதேர்தல் நடத்த முடியாது- தேர்தல் ஆணையம்

May 15, 2019 08:02 PM 80

விருகம்பாக்கத்தில், வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குசாவடியில் மறுதேர்தல் நடத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விருகம்பாக்கத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தது தொடர்பாக, தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட ராஜேஷ்வரி பிரியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரித்தது. இது சம்பந்தமாக தேர்தல் வழக்குதான் தொடர முடியுமெனவும், மறு வாக்குப்பதிவு நடத்த முடியாது எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்த நீதிபதிகள், ஆணையத்தின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததனர்.

Comment

Successfully posted