தளபதி 64ல் மீண்டும் பாடகராகும் நடிகர் விஜய்

Nov 20, 2019 09:29 PM 563

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜயை நடிப்பு, நடனம் ஆகியவற்றை கடந்து பாடகராகவும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால் மறுப்பதற்கில்லை.

“பிகில்” படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக நடித்து வரும் 64வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 2014ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளியான “கத்தி” படத்தில் அனிருத் இசையில் விஜய் ‘செல்ஃபி புள்ள’ பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில் ‘தளபதி 64’ படத்தில் விஜய் பாட உள்ள தகவல் உறுதியாகும் பட்சத்தில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆக அமையும். கடந்த தீபாவளிக்கு வெளியான ‘பிகில்’ படத்தில் நடிகர் விஜய் ‘வெறித்தனம்’ பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted