மிதிவண்டியில் வந்து நடிகர் விஜய் வாக்களித்தார்.

Apr 06, 2021 12:17 PM 2419

நடிகர்கள் பலரும் அமைத்தியா வந்து வாக்களித்துவிட்டு சென்ற நிலையில், நடிகர் விஜய் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கூறி, சைக்கிளில் வந்து வாக்களித்துவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சைக்கிள் சென்று நடிகர் விஜய் வாக்களித்தார். வீட்டில் இருந்து விஜய் சைக்கிளில் வருவதை கண்ட ரசிகர்கள் வழிநெடுக்க அவரை சூழ்ந்து கொண்டனர். வாக்குச்சாவடிக்கு விஜய் வந்ததை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய் ரசிகர்கள் கூட்டம் முன்னியடித்ததால் வேறு வழியின்றி சைக்கிளை விட்டுவிட்டு தனது உதவியாளருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போதும் விடாத ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினி, அஜித் உள்ளிட்ட நடிகர்கள் அமைதியாக வந்து வாக்களித்துவிட்டு சென்ற நிலையில், நடிகர் விஜய் விழிப்புணர்வு என்ற பெயரில் வாக்களிக்க சைக்கிளில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comment

Successfully posted