நடிகர் பிறந்தநாளுக்கு வித்தியசமாக வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்!!

Aug 11, 2020 09:46 PM 3908

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தமது வீட்டில் மரக் கன்று நடும் புகைப்படத்தை நடிகர் விஜய் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் பலர் தங்கள் சமூக வலைத்தலங்களில் அடிக்கடி வலம் வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் தமது வீட்டு தோட்டத்தில் மரக் கன்று ஒன்றை நட்டு அதன் புகைப்படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு நடிகர் மகேஷ் பாபு-வும் நன்றி தெரிவித்து ""ரீ"" ட்விட் செய்துள்ளார்.

Comment

Successfully posted