கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார் நடிகர் விஜய்

Aug 01, 2018 02:20 PM 529

உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாநிதிக்கு, கடந்த 5 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ள நிலையில், கருணாநிதி பார்க்க நடிகர் விஜய், காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து, நடிகர் விஜய் நலம் விசாரித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களை தவிர்க்கும் விதமாக, மருத்துவமனையின் பின்பக்க வாசல் வழியாக நடிகர் விஜய் புறப்பட்டுச் சென்றார்.

Comment

Successfully posted