படத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் நடிகர் விஜய் ஹீரோத்தான்

Mar 13, 2019 02:18 PM 591

தென்னிந்திய தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக ஏ.ஆர். முருகாதாஸ் இயக்கிய "சர்கார்" திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, அட்லி இயக்கும் புதிய படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடித்துவரும் விஜய்க்கு, கதாநாயகியாக நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தற்போது, இத்திரைப்படத்தை 'விஜய் 63' என அழைத்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடிகர் விஜய் நடித்திருந்தார்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் விஜய் சென்றபோது, அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அப்போது, நடிகர் விஜய் ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்தார். அந்த நேரத்தில், ரசிகர்கள் சாய்ந்திருந்த கம்பி வேலி ஒன்று, பாரம் தாங்காமல் திடீரென சாய்ந்தது. வேலி சாய்வதைப் பார்த்த நடிகர் விஜய், அதன் அருகே சென்று வேலி கீழே விழாமல் தாங்கி பிடித்து தனது ரசிகர்களை விபத்தில் இருந்து காப்பாற்றினார்.

இதனிடையே, படத்தில் சண்டையிடுவதும், பறந்து பறந்து அடிப்பதும் போன்ற மற்ற நடிகர்கள் மத்தியில், நிஜ வாழ்க்கையில் ஆபத்து என்ற உடனே பயம் அறியாமல் நடிகர் விஜய் துணிச்சலாக எதிர்கொண்ட விதம் ரசிகர்கள் இடையே பாராட்டை பெற்றார்.

மேடையில் பேசுவது போல, என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்களை விபத்தில் இருந்து காப்பற்றிய நிலையில், அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comment

Successfully posted

Super User

love u thalapathi