சேவை வரி செலுத்தாத நடிகர் விஷாலுக்கு சம்மன்!

Oct 17, 2018 01:36 PM 444

ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாத காரணத்தால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என, சேவை வரித்துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு சம்மன் அனுப்பினர்.

ஆனால், விஷால் இதுவரை சேவை வரித்துறையில் ஆஜராகவில்லை. இதனால், சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது சேவை வரித்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக, நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

Comment

Successfully posted