திரையுலகில் தொடரும் கொரோனா பலி - தொரட்டி நாயகன் ஷமன் மித்ரு காலமானார்.....

Jun 17, 2021 11:18 AM 2912

‘தொரட்டி’ படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 43. மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷமன் மித்ரு, 2019 ம் ஆண்டு வெளியான தொரட்டி படத்தை தயாரித்ததோடு, அதில் நாயகனாகவும் அறிமுகமானார். கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஷமன் மித்ரு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Comment

Successfully posted