பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் நடிகை நயன்தாரா

Mar 08, 2020 12:44 PM 1092

சென்னையில் மகளிர் தினத்தையொட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடிகை நயன்தாரா தொடங்கி வைத்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வருமான வரித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில், சென்னையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். எத்திராஜ் சாலை வழியாக சென்ற பேரணி, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் நிறைவடைந்தது.

Comment

Successfully posted