முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி நூதன வீடியோ - நடிகை ஷெஃபாலி ஷா

Mar 26, 2020 08:18 PM 5864

கொரோனா வைரசால் சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம் குறித்து பாலிவுட் நடிகை ஷெஃபாலி ஷா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  ஸ்பெயினில் இருந்து திரும்பிய பிறகு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தமது மகனை பாலிவுட் நடிகை ஷெஃபாலி ஷா கவனித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் நுரையீரலை பாதிப்பதுடன் மூச்சு விடுதலில் ஏற்படுத்தும் சிரமம் குறித்து இன்ஸ்டாகிராமில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிளாஸ்டிக் பையை முகத்தில் கட்டினால் எப்படி மூச்சு திணறல் ஏற்படுமோ, அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். தற்போதைக்கு வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே தீர்வு எனவும் ஷெஃபாலி குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted