அதிமுகவை முதுகில் குத்திய கட்டப்பா டிடிவி தினகரன்: நடிகை விந்தியா

Apr 16, 2019 07:42 AM 548

அதிமுகவை முதுகில் குத்திய கட்டப்பா டிடிவி தினகரன் என்றும் பஞ்ச பூதத்திலும் ஊழல் செய்த கட்சி திமுக என்றும் அதிமுக நட்சத்திர பேச்சாளர் விந்தியா விமர்சனம் செய்துள்ளார்.

திருவள்ளூர் மக்களவை வேட்பாளர் வேணுகோபால் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற வேட்பாளர் வைதியநாதன் ஆகியோரை ஆதரித்து சென்னை பூந்தமல்லியில் பிரசார பொதுகூட்டம் நடைப்பெற்றது. இதில், அதிமுக நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான விந்தியா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், மீத்தேனுக்கு கையெழுத்து போட்டது திமுக என்று கூறினார். திமுக காங்கிரஸ் கூட்டணி தான் தமிழகத்திற்கு நீட் தேர்வை கொண்டு வந்தது என்று குறிப்பிட்ட அவர், ஊழலின் மொத்த உருவமே திமுக தான் என கூறியுள்ளார். மேலும், அதிமுகவை முதுகில் குத்தின கட்டப்பா டிடிவி தினகரன் என்று விந்தியா விமர்சித்தார்

 

Comment

Successfully posted